2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பட்ட நூலில் மின்சாரம் பாய்ந்தது: சிறுவனுக்கு பாதிப்பு

Editorial   / 2023 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பட்டம் விட்டுக்கொண்டிருந்த நூலில் மின்சாரம் பாய்ந்ததில், 13வயதான  சிறுவன் ஒருவன் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், புத்தளத்தில் உள்ள தலுவ பிரதேசத்தில்  இடம்பெற்றுள்ளது.

கூட்டுறவு சங்க கட்டிடத்தின், மொட்டை மாடியில் இருந்து குறித்த சிறுவன் ​ஞாயிற்றுகிழமை(27)  பட்டம் பறக்கவிட்டுக்கொண்டிருக்கும் போது பட்டத்தின் நூல் மின்சார கம்பியில் சிக்கியுள்ளது. அதனை எடுக்க முற்ப்பட்ட​ போதே  அச்சிறுவன் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக அச்சிறுவனை மீட்டுபுத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சிறுவனின் நிலை கவலைக்கிடமாக இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .