Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 ஒக்டோபர் 10 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், செர்பிய வீசாக்களை பயன்படுத்தி கட்டார், டோஹா ஊடாக செர்பியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 08 பங்களாதேஷ் பிரஜைகள் வியாழக்கிழமை (10) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை (09) இரவு 08.20 மணியளவில், இந்தக் குழுவின் முதலாவது பங்களாதேஷ் பிரஜை கத்தாரின் தோஹா நோக்கிப் புறப்படவுள்ள கத்தார் ஏர்வேஸ் விமானமான KR-655 இல் ஏறுவதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான அனுமதிக்காக கத்தார் ஏர்வேஸ் அதிகாரிகளிடம் அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் செர்பிய விசாவும் இருந்ததால் சந்தேகமடைந்த அதிகாரிகள், பயணியிடம் அவர் சமர்ப்பித்த ஆவணங்களுடன் குடிவரவுத் துறையின் எல்லை அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
அங்கு நடத்தப்பட்ட தொழிநுட்ப சோதனையின் போது, செர்பிய விசா மோசடியான முறையில் தயாரிக்கப்பட்டது என்பது உறுதியானதுடன், அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த விமானத்திற்கு உதவிய பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பார்வையாளர்கள் மண்டபத்தில் தங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. .
அதன்படி அவரை கைது செய்த குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடத்திய விசாரணைகளின் போது மேலும் 06 பங்களாதேஷ் பிரஜைகள் நீர்கொழும்பு விடுதி ஒன்றில் சேர்பியா செல்வதற்காக காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், இந்த பங்களாதேஷ் பிரஜைகள் தங்கியிருந்த நீர்கொழும்பு விடுதியை சுற்றிவளைத்து, குழுவைக் கைது செய்து, குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago