2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

நாக்குப் புற்றுநோய் அறுவை சிகிச்சை

Freelancer   / 2025 பெப்ரவரி 17 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரிசியஸ் நாட்டின் புதிய நவீன புற்றுநோய் மருத்துவமனையில் இந்தியாவின் பிரபல முகச் சீரமைப்பு நிபுணர் டொக்டர். பாலாஜி முதலாவது நாக்குப் புற்றுநோய் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார்.

  இந்த நவீன புற்றுநோய் மருத்துவமனையை கடந்த பெப்ரவரி 4ஆம்; திகதியன்று மொரிசியஸ் சுகாதாரத்துறை அமைச்சர் அனில்குமார் பட்சு திறந்து வைத்தார்.

இந்த மருத்துவமனையில் முதலாவது அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த பேராசிரியர் டொக்டர் எஸ். எம். பாலாஜியை மொரிசியஸ் பிரதமர் டொக்டர் நவீன் ராம் கூலம் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது டொக்டர் பாலாஜி மொரீசியஸ் நாட்டில் பல், வாய், முகம் மற்றும் கபால சீரமைப்பு திட்டங்களை மேன்மைப்படுத்தியமைக்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

பிரதமர் டொக்டர் ராம்கூலத்துடனான சந்திப்பின்போது டொக்டர் பாலாஜி மருத்துவ அறிவியல் ரீதியாக உருவாகும் புற்றுநோய் மற்றும் முகத்தின் பிறப்பு குறைபாடு தேசிய பதிவேட்டை பற்றி ஆழமாக விளக்கினார்.

அத்துடன் தான் எழுதிய ஊடiniஉயட ஊசயnழைஅயஒடைடழ கயஉயைட ளுரசபநசல என்னும் முகச் சீரமைப்பு தொடர்பான புத்தகத்தை பிரதமருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

;.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X