Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை
Mayu / 2024 ஒக்டோபர் 21 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹியங்கனை லொக்கலோ ஓயாவிலிருந்து 17 வயதுடைய மாணவி ஒருவரின் சடலம் திங்கட்கிழமை (21) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனியார் வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்ற இரு மாணவிகளில் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவருடன் சென்ற மற்றைய மாணவி தற்போது ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்தில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (20) இரவு லொக்கலோ வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றினை மாணவி ஒருவர் நிறுத்தியுள்ளார். அந்த மாணவியை, மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பொலிஸ் வீதித்தடை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை நகரில் உள்ள தனியார் வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை (20) காலை வீட்டிலிருந்து சென்ற இரு மாணவிகளும் வீடு திரும்பாததால் பெற்றோர் பதுளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதையடுத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago