2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

தந்தையால் பாலியல் வன்கொடுமை

Freelancer   / 2023 ஒக்டோபர் 13 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக்க

ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் தனது 12 வயது  மகளை தந்தை பாலியல் ரீதியாக பாலியல் தொல்லை செய்துள்ளதாக நேற்றையதினம் (12)  அட்டமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொட்டியாகலை கேகலன பிரதேசத்தில் வசிக்கும் இந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத பல சந்தர்ப்பங்களில் தந்தையினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில் சிறுமி இதுபற்றி தனது தாயிடம் கூறியுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சியாம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதற்கமைய சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலைமாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .