2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தக்காளி சோஸ் கலன்கள் அழிப்பு

Janu   / 2023 டிசெம்பர் 17 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறமூட்டி எந்தவிதமான உணவு தயாரிப்பு நியதிக்கும் உட்படுத்தாது தயாரிக்கப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான தக்காளி சோஸ் கலன்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டுள்ளன .

ஹோமாகம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இந்திக கடுதம்ப தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பாதுக்க, வட்டறுக்க,  யொவுன்கம பிரதேசத்தில் அமைந்திருந்த தொழிற்சாலையில் இந்த சோஸ் மாதிரிகளைப் பெற்று பரிசோதனை மேற்கொண்டதற்கமைய இது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றது என்பதோடு, இந்த சோஸில் தக்காளி சேர்க்கப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட நிறுவனத்திற்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட சோஸ் கலன்களை அழிப்பு செய்யுமாறும் ஹோமாகம நீதிமன்ற நீதவான் நிப்புலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .