2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சம்பளம் வழங்கிய தோட்ட நிர்வாக ஊழியர் கைது

Janu   / 2024 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை, நேபட பிரதேசத்தில் உள்ள பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான அரச தோட்டமொன்றில் , பணியாற்றாத ஊழியர் ஒருவருக்கு மாதக்கணக்கில் சம்பளமாக ஆறு இலட்சம் ரூபாவை செலுத்தி வந்த தோட்ட  நிர்வாக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வரக்காகொட பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தோட்டத்தில் ஊழியர்களுக்கு  2024  ஜூலை மாத சம்பளம் வழங்குவதில் , அதிக செலவு செய்தது தொடர்பாக தோட்ட நிறுவனத்தின் கணக்குத் துறையில் நடத்தப்பட்ட விசாரணையின் போது.பணியில் ஈடுபடாத ஒருவரின் பெயரில் 2023 நவம்பர் முதல் 2024 ஜூலை வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் தோட்ட முகாமையாளர் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளுக்கு பின்னர் உடுகம பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .