Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Janu / 2023 ஜூலை 04 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது குறித்து சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்கவுடன் ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் சுப்பையா ஆனந்தகுமார் செவ்வாய்க்கிழமை ( 04 ) கலந்துரையாடியுள்ளார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டமைக்கு ஆளுநர் அலுவலகத்துக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த சுப்பையா ஆனந்தகுமார் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
இந்த மாவட்டங்களில் பாடசாலைகளில் காணப்படும்; பல்வேறு குறைப்பாடுகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பாடசாலைகள் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் மற்றும் தமிழ் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை குறித்தும் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
அதேபோன்று பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்டங்களில் பயன்படுத்தப்படாதுள்ள நிலங்கள், தரிசு நிலங்களை விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெற்றுக்கொடுப்பது குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் சமூகநலத்திட்டங்கள் மற்றும் நிவாரணத் திட்டங்களில் இந்த மாவட்டங்களின் மக்களையும் இணைத்துக்கொள்வதுடன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட மக்களுக்கு முன்னுரிமையளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
அதேபோன்று வாழ்வாதாரத்தை இழந்தது தவிக்கும் பெருந்தோட்ட மக்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தல், உழைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுப்பது குறித்தும் பெருந்தோட்டங்களில் காணப்படும் சுகாதார குறைப்பாடுகளுக்கு உரிய தீர்வை வழங்குவதன் அவசியத்தையும் ஆளுநரிடம் எடுத்துரைத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago