2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

சன் மேமட்ச் கம்பனியின் 240 வது நிகழ்வு

R.Tharaniya   / 2025 மார்ச் 25 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 'சூர்யா' என் ற வர்த்தக நாமத்துடன், மெழுகு பூசப்பட்ட பாதுகாப்பான தீக்குச்சிகளை இலங்கையர்களுக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்திய மலையகத் தலைநகர் கண்டியைச் சேர்ந்த சன் மேட்ச் நிறுவனத்தின் 240 வது மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கைக் கை கால்களை கொடையளிக்கும் நிகழ்வானது, அதன் ஸ்தாபகர் காலஞ்சென் ற திரு. டீ.ஆர்.ஆர். ராஜன் அவர்களின் 22 வது ஞாபகார்த்த தினத்தன்று நடைபெற்றது. 

இலங்கைச் சந்தையில் தீப்பெட்டிகள் பிரிவில் முன்னோடியாகத் திகழும் இந்நிறுவனத்தின் உற்பத்திகளுள் சூர்யா ஊதுபத்திகள், சூர்யா மெழுகுவர்த்திகள் மற்றும் சூர்யா சாம்பிராணி என்பவற்றுடன் FMCG உற்பத்திகளும் அடங்குகின் றன.
“நெவத்த எவிதிமு‘ என் ற இந்தச் சமூக நல திட்டமானது, சமூகத்தில் வலுவிழந்த நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக் கைகால்களை கொடையாக வழங்குவதுடன், தனிநபர்களுக்கு வாழ்க்கையில் புதியதொரு நம்பிக்கையையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றது. தொண் டு என்பதற்கு அப்பால் சென்று மனித நேயத்தின் மீது அதன் நிறுவனரான காலஞ் சென் ற டீ.ஆர்.ஆர். ராஜன் அவர்கள், நம்பிக்கைக் கொண் டிருந்தார்.


மாற்றுத்திறனாளிகள் தமது வாழ்க்கை மற்றும் சமூகம் தொடர்பான சாத்தியப்பாடுகளை அடைவதற்கான கல்வியையும், ஆதரவையும் இத்திட்டம் வழங்குகின்றது. இந்நிகழ்வில் சன் மேட்ச் நிறுவனத்தின் தலைவர் தேசமான்ய சூரி ராஜன், மறைந்த டீ.ஆர்.ஆர். ராஜன் மனைவி ஜீவா அவர்கள் மற்றும் அவரது மகள்களான கௌரி, அகல்யா அஸ் வினி ஆகியோருடன் நிறுவனத்தின் நிர்வாகத்தினர் மற்றும் அதன் ஊழியர்கள் என் கலந்து கொண் டிருந்தனர்.

திரைப்படத் துறையைச் சேர்ந்தவர், சூர்யாவின் வர்த்தக நாமம் தூதுவருமான யசோதா விமலதர்ம அவர்கள், ஒரு நபருக்கு நடக்கும் திறனைப் பெற்றுக் கொடுப்பது என்பது மனிதகுலத்திற்கு கிடைக்கக்கூடிய மிகப் பெரியதொரு சன் மானம் எனக் குறிப்பிட்டார். சன் மேட்ச் நிறுவனத்தின் பணிப்பாளரும், தலைவரும் நிர்வாக அதிகாரியுமான திருமதி  கௌரி  ராஜன், “நெவத்த எவிதிமு“ முன் முயற்சி என் பது சன் மேட்ச் நிறுவனத்தின் அனைத்து சமூகங்களுக்குமான நீ டித்த அர்ப்பணிப்புக்கான ஒரு சான் றாகும்.

எங்கள் , “நெவத்த எவிதிமு“ நிறுவனர் திரு டீ.ஆர்.ஆர். ராஜன் அவர்களின் 22 வது நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில் அவர்கள் கௌரவிப்பதுடன் நின்றுவிடாமல், மாற்றுத்திறனாளிகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண் டு அவர்களுக்கு மசயற்ளக உடலுறுப்புகளை வழங்குகிறோம். , “நெவத்த எவிதிமு“ ' மூலம் அவர்களுக்கு ஒளிமயமான, உறுதியான எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கின்றோம்” எனக் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட, கண்டி குண் டசாலையில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நிலையம் நோயாளர்களை அடையாளம் காணவும், செயற்கைக் கைகால்களை உற்பத்தி செய்யவும் என தன் னைஅர்ப்பணித்துக் கொண் டுள்ள காலஞ்சென் ற திரு.டீஆர்.ஆர். ராஜன் அவர்களின் அந்த நிலையத்தின் தலைவராக இருந்த போது USAID, NORAD போன் ற புகழ் பெற்ற நிறுவனங்களுடனும், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்கைக் கை கால்களை உற்பத்தி செய்வதிலும், விநியோகிப்பதில் இன பின்னணிசயோ அல்லது பாலின வெறுபாடுஇன் றி செயற்பட்டார்.

கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடியின் பொதும், எங்கள் நிறுவனருக்கு மரியாதைச்செலுத்தும் முகமாக நாங்கள் இதனை தொடர்ந்ததொம் என சன் மேட்ச் தலைவரும் மறைந்த டீ.ஆர்.ஆர். ராஜனின் சகோதரருமான சூரி ராஜன் குறிப்பிட்டார். சமூகப் பொறுப்புணர்வுக்கான ஆழமான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் சன் மேட்ச் நிறுவனம், ‘“நெவத்த எவிதிமு‘  ‘ திட்டத்தின் மூலம் தனிநபர் தமது இயக்கத்ளத மீளபெறவும், சக பணியாளர்களின் சேர்ந்து கண் ணியமாகவும், சுயாதீன மாகவும் வாழவும் வழிவகுத்துக் கொடுக்கிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X