2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சகோதர பாசத்தை மிஞ்சிய காணி தகராறு

Janu   / 2023 டிசெம்பர் 05 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணி தகராறில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது சகோதரியை வீச்சுக் கத்தி ஒன்றில் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் புத்தளம் - பல்லம பகுதியைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி - நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்லம - திம்பிரிகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தனது சகோதரியுடன் ஏற்பட்ட காணித் தகராறு காரணமாக குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் தனது சகோதரியை வீச்சுக் கத்தி ஒன்றினால் தாக்கி காயப்படுத்தியுள்ளார் என பல்லம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

 ரஸீன் ரஸ்மின்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .