Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Janu / 2023 ஒக்டோபர் 17 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து “கொத்தமல்லி” என அறிவித்து பீடி இலைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்த ஒருவரை சுங்க மத்திய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் வியாழக்கிழமை (12) கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹோமாகம பகுதியை சேர்ந்தவர் எனவும் 11,460 கிலோ கிராம் எடை கொண்ட குறிப்பிட்ட பீடி இலைகள் தொகையை துறைமுக சுங்கத்திலிருந்து விலக்கு அளித்திருந்தால், அரசுக்கு ஏழு கோடியே எழுபது லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகளால் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இரண்டு வாரங்களுக்கு முன்னர் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு உற்பத்தி சிகரெட் தொகையை சுங்க அதிகாரிகளால் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டி.கே.ஜி .கபில
.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago