2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

Janu   / 2024 மே 22 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொறொந்துடுவ, பொல்ஹேன பகுதியில் கூரிய ஆயுதங்களால் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மொறொந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம, வல்கம பகுதியைச் சேர்ந்த லசந்த புஷ்ப குமார என்ற 30 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர், அவரது நண்பர்கள் சிலருடன் மொறந்தொடுவில் உள்ள தனது மைத்துனர் மற்றும் சகோதரியின் வீட்டிற்கு வந்ததாகவும், அங்கு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறி இக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .

உயிரிழந்த நபர் காலில் மற்றும் கைகளில் கூரிய ஆயுதத் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் வீட்டுக்கு அருகில் உள்ள வீதியில் கீழே விழுந்து கடந்த நிலையில் 1990 சுவசெரிய அம்புலன்ஸ் ஊடாக கொணடுவ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அப்போதும் அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

கொலை செய்த நபரும் வெட்டுக்காயங்களுடன் பொலிஸ் நிலையத்திற்கு வந்து தான் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக கூறி வைத்தியசாலைக்கு சென்று பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .