2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

கள்ளக்காதலால் விபரீதம் : இருவர் பலி

Mayu   / 2024 நவம்பர் 19 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொறவெவ வண்ணான்குளம் பகுதியில் பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, மற்றுமொரு பெண்ணை படுகாயமடையச் செய்த சந்தேக நபர் ஒருவர், தனது வீட்டுக்குச் சென்று திங்கட்கிழமை (18) உயிர்மாய்த்துள்ளார்.

வண்ணான்குளம், லபுனோறுவ பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதுடைய பெண் ஒருவரும் 30 வயதுடைய ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகாத உறவின் காரணமாகவே தாக்குதல் இடம்பெற்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீதவானால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையின் சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் சம்பவத்தில் காயமடைந்தவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் மொறவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .