2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கடல் அலையில் சிக்கி மீனவர் பலி

Janu   / 2024 ஜூன் 02 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி - நுரைச்சோலை, இலந்தையடி பகுதியில் இயந்திரப் படகு மூலம் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் இயந்திர படகு அலையில் சிக்கி விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுரைச்சோலை - இளந்தையடி  பகுதியைச் சேர்ந்த டபிள்யூ. ரணில் பெர்னாண்டோ (வயது 33) எனும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் . 

உயிரிழந்த மீனவர், தனது நண்பர்களுடன் மீன்பிடித் தொழிலுக்காக இயந்திர படகில் வெள்ளிக்கிழமை (31) அன்று  கடலுக்குச் சென்ற போது, இயந்திரப் படகு பெரும் அலையில் சிக்குண்ட நிலையில் நீரில் மூழ்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அவருடன் பயணித்த ஏனைய மீனவர்கள் நீரில் மூழ்கிய நபரை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரனைகைளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஸீன் ரஸ்மின்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .