2025 ஜனவரி 15, புதன்கிழமை

கட்டுநாயக்கவில் 'லைசியம்'

Janu   / 2024 ஜூலை 10 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

லைசியம் சர்வதேச பாடசாலையானது அதன் 10வது கிளையை கட்டுநாயக்கவில் மே 6ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டதுடன் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை பயணத்தை குறித்திருக்கிறது. நிர்வாக அலுவலகத்தின் திறப்பு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி காவிந்த ஜயவர்தன, பணிப்பாளர் நாயகம் நிலங்க இம்புல்தெனிய, பிரதி ஒருங்கிணைப்பு அதிபர்  குமாரி விஜேரத்ன, சிரேஷ்ட முகாமைத்துவம், கல்விசார் மற்றும் கல்விசாரா பணியாளர்கள் உட்பட  அதிதிகள் கலந்து கொண்டனர்.

புதிதாக நிறுவப்பட்ட கிளையானது, நவீன வகுப்பறைகள், அதிநவீன ஆய்வகங்கள் மற்றும் நீச்சல் குளம் ஆகியவற்றை உள்ளடக்கிய அதிநவீன வசதிகளுடன் புதுமையின் கலவையை காட்சிப்படுத்துகிறது. இளம் கற்கும் மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பள்ளியானது தினப்பராமரிப்பு முதல் முன்பள்ளி மற்றும் தரம் 1 வரை விரிவான நிகழ்ச்சிகளை  வழங்குவதன் மூலம், இலங்கையில் சர்வதேச கல்வியில் லைசியத்தின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.

இந்நிகழ்வின் போது, ​​ தொலைநோக்குப் பார்வையுடைய ஸ்தாபகரான கலாநிதி மோகன்லால் கிரேரோவுக்கு திரு.நிலங்க இம்புல்தெனிய புகழஞ்சலி செலுத்தினார். அவரது தொலைநோக்குப் பார்வை 31 வருடங்களுக்கு முன்னர் லைசியத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டது. இலங்கை சமூகத்திற்கு அணுகக்கூடிய, உயர்தர சர்வதேசக் கல்வியை வழங்குவதற்கான திரு.கிரேரோவின் தொலைநோக்குப் பார்வையானது, கல்விச் சிறந்து விளங்குவதற்கான கலங்கரை விளக்காக மாறுவதற்கான லைசியத்தின் பயணத்தின் மூலக்கல்லாகும்.

லைசியம் கட்டுநாயக்கவில் திறக்கபடுகின்றதுடன், பாடசாலை அதன் கல்வி தனித்துவத்தின் முறைமையை எதிர்காலத் தலைவர்களை வளர்பதற்கு விரிவுபடுத்துகிறது. முன்பள்ளியிலிருந்து தரம் 1, மற்றும் இரண்டரை வருடங்கள் உள்ள ஆர்வமுள்ள மாணவர்கள், லைசியத்தில் ஒரு உருமாறும் கல்வியில் அர்பணித்து தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வரவேற்கப்படுகிறார்கள். இந்தக் கல்விப் பயணத்தின் தொடக்கமாகக் குறிப்பது, ஒவ்வொரு ஆண்டின் புரட்டாதி மாதம் ஒரு புதிய தரத்தைச் சேர்ப்பதுடன், அனைத்து மாணவர்களுக்கும் முற்போக்கான மற்றும் விரிவான கல்வி அனுபவத்தை உறுதி செய்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X