Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Janu / 2025 பெப்ரவரி 10 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரணை, போருவதண்ட பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத போலி கச்சேரி ஒன்றை சுற்றி வளைத்து, தேசிய அடையாள அட்டைகள், வாகன வருமான வரி அனுமதி பத்திரங்கள் மற்றும் அவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் உள்ளிட்ட போலி ஆவணங்களுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெற்கு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஹொரணையின் பொருவதந்த பகுதியில் உள்ள சந்தேக தம்பதியினரின் வீட்டை சோதனை செய்தபோது,
எட்டு போலி தேசிய அடையாள அட்டைகள், மூன்று காப்பீட்டு சான்றிதழ்கள், சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடப் பயன்படுத்தப்படும் 12 அட்டைகள், 03 வாகன வருமானவரி சான்றிதழ்கள், 03 புகை பரிசோதனை சான்றிதழ்கள், 01 மீளப் பெறும் சான்றிதழ்கள், டீ. வீ. டீ , சீ.சீ -48. , ஒரு மடிக்கணினி மற்றும் 03 கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பின்னர், சந்தேகத்திற்கிடமான தம்பதியினர் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தபோது, ஒரு வண்ண அச்சுப்பொறி, ஒரு லெமினேட்டிங் இயந்திரம், ஒரு ஸ்கேனர், ஒரு பாலிமர் சீல் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் போலி சான்றிதழ்கள் அச்சிடப் பயன்படுத்தப்படும் மை , மோட்டார் போக்குவரத்து ஆணையர், நிதி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் 28 அதிகாரப்பூர்வ முத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
.பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட உத்தியோகபூர்வ முத்திரைகளில் மினுவாங்கொடை, மின்னேரிய, புத்தளம், ஹிங்குராங்கொடை மற்றும் படபொல உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த பிரதேச செயலாளர்கள் மற்றும் காப்பீட்டு முகவர்களின் முத்திரைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
1 hours ago