2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய சுறா

Janu   / 2023 ஒக்டோபர் 12 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் - கங்கைவாடி பகுதியில் புள்ளிச்சுறா மீனொன்று வலையில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

குறித்த சுறா மீன் வலையில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (10) கரையொதுங்கியதாக புத்தளம் வனாத்தவில்லு  வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு கரையொதுங்கிய புள்ளிச்சுறா மீன் சுமார் 25 அடி நீளமுடையது எனவும் 2000 கிலோ கிராம் எடை கொண்டு காணப்படுவதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த புள்ளிச் சுறா மீனை பார்வையிடுவதற்காக புத்தளம், கற்பிட்டி , பாலாவி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருகை தந்தனர்.

ரஸீன் ரஸ்மின்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .