2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

இலவச ஊடக செயலமர்வு

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதிலும் உள்ள ஊடக ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் வண்ணம் இலவச ஊடக செயலமர்வொன்று இம்மாதம் 27ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜே.எம். மீடியா நிறுவனம் பத்தாவது வருடமாகவும் இந்த செயலமர்வை ஏற்பாடு செய்துள்ள நிலையில்,  இச்செயலமர்வு கொழும்பு புதிய நகர மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) தினம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த இலவச ஊடக செயலமர்வில் தேசிய மட்டத்தில் பிரபலமான‌  பல ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் நடாத்தப்படவுள்ளதாக ஜே. எம் மீடியா நிறுவனத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான சட்டமாணி ராஷிட் மல்ஹர்டீன் தெரிவித்தார்.

ஆசிரியர்கள், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள்,ஊடக அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புகின்றவர்கள், ஊடக ஆர்வலர்கள், சமூக வலைத்தளங்கள், மற்றும் செய்தி இனையங்களை செயற்படுத்துகின்றவர்கள் என 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இச்செயலமர்வில் கலந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.  

முழுமையாக பங்குபற்றும் அனைவருக்கும் பெறுமதியான சான்றிதழ் வழங்கப்படவுள்ளதுடன் செயலமர்வில் கலந்துகொள்ள விரும்புவர்கள்  0777 128 348 எனும் இலக்கத்துக்கு அழைத்து இலவசமாக பதிவுகளை முன்னெடுக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .