2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

இலஞ்சம் பெற்ற நீதிபதிக்கு விளக்கமறியல்

Janu   / 2024 ஏப்ரல் 24 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் காழி நீதிமன்ற நீதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை  (23) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்  ,   5,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முற்பட்ட போது, புத்தளம் காழி நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து  கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புத்தளம், வெட்டாளை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டுக்கமையவே , இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் விவாகரத்து வழக்கு தொடர்பில் விவாகரத்து சான்றிதழை வழங்குவதற்காக குறித்த நீதிபதி, அந்த பெண்ணிடம் 5000 ரூபாவை இலஞ்சமாக கேட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை  (23) மாலை புத்தளம் காழி நீதிமன்றத்திற்கு வருகை தந்த குறித்த பெண், காழி நீதிபதி கேட்ட 5000 ரூபா பணத்தை அவரிடம் கொடுத்த போதே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் , மே 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான்  உத்தரவிட்டுள்ளார் .

ரஸீன் ரஸ்மின்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .