2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

இரஜமஹா விகாரையில் புதையல் தோண்டிய 06 பேர் கைது

Mayu   / 2023 டிசெம்பர் 28 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூரியவெவ, கெமஹத்த புராதன இரஜமஹா விகாரையில் புதையல் தோண்டிய 06 பேர் கைது செய்யப்பட்டதாக சூரியவெவ பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

சூரியவெவ பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அதிகாலை 03 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்தநிலையில் சூரியவெவ, நமடகஸ்வெவ, செவனகல, மித்தெனிய மற்றும் துங்கம பிரதேசங்களைச் சேர்ந்த 06 சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமஹட புராண இராஜ மகா விகாரையின் கெமஹட பாறைக் கல்வெட்டுக்கு அருகில் உள்ள குளத்தின் கீழ் பகுதியில் புதையல் தோண்டிய போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .