2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

அரச வங்கிகளை நோக்கிப் படையெடுக்கும் மக்கள்

Janu   / 2023 ஜூலை 31 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்வெசும கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக வங்கியில்  கணக்குகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதற்கிணங்க   மக்கள்  தற்போது  அரச  வங்கிகளை  நோக்கிப்  படையெடுத்து  நீண்ட வரிசையில் நிற்பதைக் காணமுடிகிறது.

தேசிய  சேமிப்பு  வங்கி,  இலங்கை வங்கி,  மக்கள் வங்கி,  பிரதேச அபிவிருத்தி  வங்கி  உள்ளிட்ட  அனைத்து  அரச  வங்கிகளிலும்  தமக்கான  கணக்கொன்றைத்  திறப்பதற்காக  மக்கள்  அலைமோதுகிறார்கள்.

ஜுலை  மாதம்  முடிவடைவதற்குள்  இந்தக்  கொடுப்பனவுகள்  வழங்கப்பட்டு  விடும்  என்று  தகவல்  வெளியானதைத்  தொடர்ந்து  இந்தவிதத்தில்  அசுவெசும  கொடுப்பனவுக்காகத்         தெரிவு செய்யப்பட்ட  பயனளிகள்  வங்கிகளில்  குழுமியுள்ளார்கள்.

திங்கட்கிமை  ​(31) மாத  இறுதித் தினம்  என்பதனால்  அதற்குள்  கணக்கைத்  திறந்து  விட வேண்டும் என்ற  ரீதியில்  மக்கள்  தகிக்கும்  வெய்யிலிலும்  வங்கிகளில் வரிசையில்  நின்று  அலைமோதுகிறார்கள்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .