2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அக்போவிடம் சேஸ்டை புரிந்தவருக்கு பலத்த காயம்

Janu   / 2023 டிசெம்பர் 13 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மது போதையில் இளைஞரொருவர், வீதியால் சென்ற யானையிடம் சேஸ்டை செய்ததில் அவரை காலால் உதைத்து தள்ளியதில் பலத்த காயங்களுகுள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தனது முன்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தால் சிகிச்சையளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட "அக்போ" என்றழைக்கப்படும் யானை உணவு தேடி திரப்பனே பிரதேசத்தைச் சேர்ந்த கணுமுல்லேகம வாவியை அண்டிய பிரதேசத்தில் வீதியால் சென்று கொண்டிருக்கும்போது, மது போதையிலிருந்த இளைஞரொருவர் யானையில் கீழால் புகுந்து விளையாடி, அதன் தும்பிக்கையையும் பிடித்துள்ளார்.

இறுதியில் பிரதேசவாசிகள் இவ இளைஞனை பலமுறை எச்சரித்தும் அதனையும் பொருட்படுத்தாது பின்புறமாக அதன் வாலைப்பிடித்து முதுகில் ஏற எத்தனித்தபோது, தனது பின் காலால் இளைஞனைத் தாக்கியதில், குறித்த இளைஞன் தூர வீசப்பட்டுப் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அஸ்ஹர் இப்றாஹிம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .