Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை
Janu / 2024 ஜூலை 23 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த “Kish விவேகன்ஸ் ப்றீமியர் லீக் 2024”கிரிக்கட் சம்பியன் கிண்ணத்தை தெமட்டகொடை நைட் ரைடர்ஸ் 27 ஓட்டங்களால் தம்மை எதிர்த்து போட்டியிட்டு எலக்கந்த ஜேடி போய்ஸ் அணியை வீழ்த்தி கிண்ணத்தை தம்வசப்படுத்தியது.
கொழும்பு முவர்ஸ் மைதானத்தில்நடைபெற்ற அணிக்கு அறுவர் கொண்ட மென்பந்து கிரிக்கட் தொடரில் மொத்தமாக நான்கு குழுக்களின் கீழ் 21 அணிகள் கலந்துகொண்டன. குழுநிலைப் போட்டிகள், கால் இறுதி, அரை இறுதி, மாபெரும் இறுதிப் போட்டி என மொத்தமாக 52 போட்டிகள் நடைபெற்றன.
இறுதிப்போட்டியில் எம்.பிரதீப் தலைமையிலான எலக்கந்த ஜேடி போய்ஸ் அணியில் ஆர் பிரணவன், ஆர். ஜெசிந்தன், எஸ்.ஹரிஹரன், டி. விக்னேஸ், கே.சுலக்ஷன் ஆகியோரும் யூ. வாகீசன் தலைமையிலான தெமட்டகொடை நைட் ரைடர்ஸ் அணியில் ஆர். வேலுசாமி,கே.பிரசாந்தன், ஜே.கிரிஷான், எஸ்.டிலக்ஸன் வி.சஞ்ஜீவன் ஆகிய வீரர்களும் களமிறங்கினர்.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தெமட்டகொடை நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட ஐந்து ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து 67 ஒட்டங்களை பெற்றதுடன் ஆர். வேலுசாமி 25 ஓட்டங்களையும், வி.சஞ்ஜீவன் ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களையும் தமது அணிக்கு பெற்றுக் கொடுத்ததுடன் எலக்கந்த ஜேடி போய்ஸ் சார்பாக பந்து வீச்சில் டி. விக்னேஸ் ஆறு ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டை வீழ்த்தினார்.
68 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய எலக்கந்த ஜேடி போய்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டி.விக்னேஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அவ்வணியின் துடுப்பாட்ட வீரர்கள் போட்டியை தம்வசப்படுத்த முனைந்தபோதிலும் தெமட்டகொடை நைட் ரைடர்ஸ் பந்துவீச்சாளர்கள் சிறப்பான முறையில் பந்து வீசி போட்டியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
துடுப்பாட்டத்தில் ஆர் பிரணவன் மாத்திரம் தனிநபராக போராடி ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட ஐந்து ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 40 ஓட்டங்களை பெற்று 27 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
தெமட்டகொடை நைட் ரைடர்ஸ் சார்பாக எஸ்.டிலக்ஸன்,யூ. வாகீசன் ஆகியோர் தலா ஒரு விக்கட்டினை வீழ்த்தினர்.
இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடரின் சிறந்த வீரராகவும் தெமட்டகொடை நைட் ரைடர்ஸ் அணியின் ஆர். வேலுசாமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருது எலக்கந்த ஜேடி போய்ஸ் அணியின் டி. விக்னேஸிற்கு வழங்கப்பட்டது. சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது ரட்ணம் செலஞ்சர்ஸ் அணியின் அஜித்துக்கு வழங்கப்பட்டது.
பிரதம விருந்தினராக ஈஸ்வரன் பிரதர்ஸ் தலைவர் கணேஷன் தெய்வநாயகம் கலந்துகொண்டதுடன் தெமட்டகொடை நைட் ரைடர்ஸ் அணிக்கு சம்பியன் கிண்ணத்தையும் ஒரு இலட்சம் ரூபா பணப் பரிசையும் வழங்கினார். இரண்டாம் இடத்தை பெற்ற எலக்கந்த ஜேடி போய்ஸ் அணிக்கு கிண்ணமும் 50 ஆயிரம் பணப் பரிசும் வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக கிஷ் நிறுவனத்தின் அதிகாரிகள்,கல்லூரியின் பழைய மாணவரும், வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எஸ். ஸ்ரீ கஜன்;,எஸ். மணிவண்ணன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இதுதவிர கல்லூரி அதிபர் மூ.மூவேந்தன், பழைய மாணவர் சங்க உப தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோரும் நிகழ்;வில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
1 hours ago
1 hours ago