2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

37வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி

Editorial   / 2024 ஜூன் 24 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். எப். றிபாஸ்

பாலமுனை சுப்பர் ஓர்கிட் விளையாட்டுக்கழகத்தின் 37வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  ஏற்பாடு செய்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி பாலமுனை ஹிக்மா வித்தியாலய மைதானத்தில் வௌ்ளிக்கிழமை (21) இடம்பெற்றது.

கழகத்தின் தலைவர் ஜே.அமீன் தலைமையில் இடம்பெற்ற இச்சுற்றுப் போட்டியின் இறுதி போட்டிக்கு அக்கரைப்பற்று லீ ஸ்டார் மற்றும் டீன்ஸ் ஸ்டார் விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றின. அதில், லீ ஸ்டார் கழகம் வெற்றி பெற்றது.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னணி கழகங்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  சர்வதேச விவகாரங்கள் பணிப்பாளரும், மெட்றோபொலிடன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாகவும்,அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்சில், கழகத்தின் ஆலோசகரும்,அதிபருமான பீ.முஹாஜிரின்,  பாலமுனை மு. கா. அமைப்பாளர்  அலியார் ஆகியோர்  கௌரவ அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற கழகத்தினருக்கு வெற்றிக்கேடயங்களை வழங்கி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X