Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 03 , பி.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.என்.எம். அப்ராஸ், நூருல் ஹுதா உமர், றாஸிக் நபாயிஸ்
கல்முனை மாநகர சபையால் வழங்கப்படும் சம்பளத்தைக் கொண்டு "மாதம் ஒரு வேலைத்திட்டம்" எனும் நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பித்து அதன் பிரகாரம் தனது இறுதி சம்பளத்தை மருதம் விளையாட்டுக் கழகத்திற்கு தேவையான விளையாட்டு உபகரணங்களையும், சப்பாத்துக்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம்.ஷிபானால் வழங்கி வைக்கப்பட்டது.
மருதமுனை மருதம் விளையாட்டுக்கழகத்திற்கு தேவையாக இருந்து வந்த விளையாட்டு உபகரணங்களையும், சப்பாத்துக்களையும் விளையாட்டுக்கழக நிர்வாகத்தினரின் வேண்டுகோளின் பேரில் இம்மாத சம்பளத்தில் பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்திருந்தமையை நிறைவேற்றி வைத்தமை மகிழ்ச்சியளிப்பதாக இங்கு கருத்து வெளியிட்ட மருதம் விளையாட்டுக்கழக நிர்வாகத்தினர் மகிழ்ச்சி வெளியிட்டனர்.
அண்மையில், தனது இல்லத்தில் வைத்து மருதம் விளையாட்டுக்கழக நிர்வாகத்தனரிடம் விளையாட்டு உபகரணங்களை கையளித்த அங்கு உரையாற்றிய கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஷிபான், “எனக்கு வாக்களித்த எனது வட்டார மக்கள் எந்தத் தேவையும் இன்றி எனக்காக வாக்களித்தவர்கள். அவர்கள் எனக்கு வாக்களிப்பதற்காக பணமோ பொருளோ என்னிடம் கேட்டதுமில்லை. நான் கொடுத்ததும் இல்லை. சேவை நோக்கம் கருதி வாக்களித்த மக்களின் தேவையை நிறைவேற்றும் பொருட்டு எமது பிரதேசத்தில் பொதுப்படையான தேவைகளை இனங்கண்டு செயலாற்ற வேண்டிய கடமைப்பாடு எனக்கு உள்ளது. எதிர்வரும் காலங்களிலும் பல வேலைத்திட்டங்களை செய்ய காத்திருக்கிறேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago