Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Mayu / 2024 மார்ச் 11 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்டம் பெரியகல்லாறு ஒலிம்பியா விளையாட்டுக் கழகம் நடாத்திய பி.பி.எல்.கிறிக்கட் திருவிழாவின் இறுத்திப்போட்டி நிகழ்வு கழகத் தலைவர் ஆர்.கோபாலசிங்கம் தலைமையில் பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (09) மாலை நடைபெற்றது.
இவ்விளையாட்டுத் திருவிழாவின் இறுதி நிகழ்வில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனும் பங்கேற்றிருந்தார். இவ்விருவரும் துடுப்பெடுத்தாடி போட்டியை ஆரம்பித்துவைத்தனர்.
வேஷ்டியுடன் களமிறங்கினாலும் விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காது, துடுப்பெடுத்தாடி போட்டியை ஆரம்பித்துவைத்தனர்.
இதேவேளை, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் உ.சிவராஜன், மற்றும் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இப்போட்டியில் 4 கழகங்கள் கலந்து கொண்டிருந்ததுடன் இறுத்திப்போட்டிக்கு கல்லாறு வெங்களோ கிங்ஸ் அணியும் பொட்டுறப்டர் அணியும் விளையாடின.
10 ஓவர்களைக் கொண்ட இப்போட்டியில் பொட்டுறப்டர் அணியினர் 5 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்களையும், கல்லாறு வெங்களோ கிங்ஸ் அணி 9.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 48 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன. 71 மேலதிக ஓட்டங்களால் பொட்டுறப்டர் அணி வெற்றிப்பெற்றிருந்தது.
இதில் பங்கு கொண்ட வீரர்களுக்கு பணப் பரிசுகள் வழங்கப்பட்டதுடன் வெற்றி பெற்ற கழகத்திற்கு வெற்றிக் கேடயமும், பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
24 Nov 2024
24 Nov 2024
24 Nov 2024