2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வெற்றிகரமாக முடிந்த பூப்பந்து போட்டிகள்

Freelancer   / 2023 ஜனவரி 09 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே. குமார் 
 
நுவரெலியா மாவட்ட பூப்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா மாவட்ட பூப்பந்து சங்கத்தின் தலைவர் கிண்ணத்துக்கான 2022 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப்  பூப்பந்தாட்ட போட்டிகள்,  நுவரெலியா மாநகரசபை விளையாட்டு உள்ளக அரங்கில் பெருந்திரளான வீரர்களின் பங்குபற்றுதலுடன் வெற்றிகரமாக நடைப்பெற்றன.
 
அப்போட்டிகளுக்கான பரிசளிப்பு வைபவம் வியாழக்கிழமை (04)  நடைபெற்றது. மிக நீண்ட காலத்திற்குப் பிறகுதான் இந்த போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு பங்களித்த வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் நுவரெலியா மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான மஹிந்த தொடம்பேகமகே நன்றி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .