2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

யு.டிபி.எம்-இல் அங்கம் வகிக்கும் 13 நடுவர்கள் தெரிவு

Freelancer   / 2023 ஜூலை 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் தரம் - 5 இற்கான போட்டிப் பரீட்சையில் யு.டிபி.எம் நடுவர்கள் 13 பேர் தோற்றி, தோற்றிய அனைவரும் வெட்டுபுள்ளி 70 இற்கு மேல் பெற்று சிறப்பு சித்தி எய்தனர்.  இந்த நிகழ்வானது மூதூர் கிரிக்கெட்டின் ஒரு இமாலய சாதனையாக கருதப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களினை மையப்படுத்தி இலங்கை கிரிக்கெட் சபையால் நடாத்தப்பட்ட மேற்படி நடுவர் போட்டிப் பரீட்சையில் 95 புள்ளிகளை பெற்று நஹீம் இஜாஸ் அஹமட் பரீட்சைக்கு தோற்றிய 198 பேரில் முதலிடத்தினை பெற்று மூதூர் மண்ணுக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். மேலும் கிழக்கு மாகாணத்துக்கான முதல் நான்கு இடங்களையும் யு.டிபி.எம் அமைப்பின் அங்கத்தவர்கள் தக்கவைத்து மேலும் மூதூருக்கும் திருமலை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தனர். நஹீம் இஜாஸ் அஹமட் இற்கு அடுத்ததாக கிழக்கு மாகாணத்தின் முறையே 2, 3, 4 ஆவது இடங்களினை ஐதுரூஸ் முஹம்மட் நஹ்பீஸ் 91 புள்ளிகள், பசுருதீன் முஹமட் நஸீம் 91 புள்ளிகள் மற்றும் அப்துல் லதீப் முஹம்மட் பர்சாத் 90 புள்ளிகள் ஆகியோர்களே குறித்த சாதனையினை நிகழ்த்தியவர்கள் ஆவார்கள். 

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை கிரிக்கெட் சபையால் நடாத்தப்பட்ட மேற்படி பரீட்சையில் திருமலை மாவட்டத்தில் மொத்தம் 20 பேர் வரையில் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

1. 95 புள்ளிகள் - நஹீம் இஜாஸ் அஹமட்

2. 91 புள்ளிகள் - ஐதுரூஸ் முஹம்மட் நஹ்பீஸ்

3. 91 புள்ளிகள் - பசுருதீன் முஹமட் நஸீம்

4. 90 புள்ளிகள் - அப்துல் லதீப் முஹம்மட் பர்சாத்

5. 89 புள்ளிகள் - தௌபீக் முஹம்மட் பயாஸ்

6. 86.5 புள்ளிகள் - ஜமால்தீன் முஹம்மட் ஜஸ்றூன்

7. 86 புள்ளிகள் - ஜஹாங்கீர் முஹம்மட் சப்றாஸ்

8. 85 புள்ளிகள் - ஜீவரத்னம் கார்தீபன்

9. 83.5 புள்ளிகள் - இமாம் சாஹிப் முஹம்மட் நஜ்றான்

10. 83 புள்ளிகள் - புஹாரி முஹம்மட் சஜான்

11. 82 புள்ளிகள் - முஹம்மட் ரபீக் முஹம்மட் ஹில்மி

12. 82 புள்ளிகள் - கசுதீன் முஹம்மட் அஜ்வாத்

13. 81.5 புள்ளிகள் - முஹம்மட் ரபீக் முஹம்மட் சிஹான்

மேற்படி சித்தியடைந்த நடுவர்களுக்கான நியமனங்கள் மற்றும் சான்றிதல் வழங்கும் நிகழ்வுகள் கொழும்பு கெத்தாராம ஆர் பிரேமதாஸ சர்வதேச கிரிக்கட் மைதானத்தின் கேட்போர் கூடத்தில் மிக விரைவில் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .