Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 நவம்பர் 29 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எப். முபாரக்
திருகோணமலை மாவட்டம் மூதூர் அல்ஹிலால் மத்திய கல்லுாரின் பழைய மாணவன் தேசிய இராணுவ தடகளப் போட்டியில் சாதனை படைத்துள்ளார்.
நடைபெற்ற 2020/2021 ஆண்டுக்கான 57 ஆவது தேசிய இராணுவ தடகளப்போட்டியில் அல் ஹிலால் மத்திய கல்லூரியின் பழைய மாணவனும், கொழும்பு பல்கலைகழகத்தின் மாணவருமான ஆர்.எம். நிப்ராஸ் இரண்டு தங்கப் பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
1,500 மீற்றர், 4*1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கங்களை நிப்ராஸ் வென்றதோடு, 4*800 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.
இவர் பாடசலை காலத்தில் பாடசாலை மட்ட, மாவட்ட, மாகண மட்ட ,தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களைப் பெற்றதோடு, கடந்தாண்டு தெற்காசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் இலங்கை சார்பில் கலந்துகொண்டு 800m ஒட்டப்போட்டியில் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் அடுத்தாண்டில் சாதனை படைத்திட அல்-ஹிலால் மத்திய கல்லூரி சார்பில் அதிபர் கே. றஸிம், பாடசாலை சமூகம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago