2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

முதலிடம் பெற்ற சப்ராஸுக்கு கெளரவம்

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 18 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எம். அஹமட் அனாம்

தேசிய விளையாட்டு விழாவில் இடைப் பிரிவின் கீழ் பங்குபற்றி முதலாமிடத்தைப் பெற்ற ஓரியன்ட் ஜிம் நிலைய பயிற்றுவிப்பாளர் எம்.எல்.எம். சப்ராஸை கௌரவிக்கும் நிகழ்வானது சனிக்கிழமை (13) நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, போதைப்பாவனைக்கு அடிமையாகாமல் சமூகத்துக்கும் தனது பிரதேசத்துக்கும் சிறந்த  இளைஞர்களாக திகழ்வதற்கு ஜிம் சென்றர்களும் விளையாட்டுக் கழகங்களும் உழைக்க வேண்டும் என்று கூறினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“இன்று அதிகமான இளைஞர்கள் போதைப்பாவனைக்கு அடிமையாகி சிறுவயதிலயே தங்களால் எந்த வேலைகளையும் செய்யமுடியாது உடல் சோர்ந்து காணப்படுவதையும் சிலவேளை இளவயது மரணம் ஏற்படுவதையும் அவதானிக்க முடிகின்றது. அவ்வாறானவர்களுக்கு சிறந்த வழிகாட்டல் இன்மையே காரணம்.

ஓரியன்ட் ஜிம் நிலையத்தினை போன்று எமது பிரதேசத்தில் இன்னும் பல ஜிம் நிலையங்கள் இயங்குகின்றது அது வரவேற்கத்தக்க விடயமாகும்.  எதிர்காலத்தில் எமது பிரதேசத்தில் உள்ள ஜிம் நிலையங்கள் இன்னும் அதிகமான இளைஞர்களை உள்வாங்கி எமது பிரதேசத்தில் சிறந்த இளைஞர்களை உருவாக்குவதுடன் போதைப்பாவனையற்ற பிரதேசமாகவும் மாற்றுவதற்கு அனைவரும் உழைக்க வேண்டும்.

எதிர்காலத்தில் பெண்களுக்கான உடற்பயிற்சி நிலையங்களும் எமது பிரதேசத்தில் ஆரம்பிக்கும் கருத்திட்டம் உள்ளது.

எம்.எல்.எம். சப்றாஸ் எமது மாவட்டத்துக்கும் எமது பிரதேசத்துக்கும் பெற்றுத்தந்த வெற்றிக்காக அவரையும் ஓரியன்ட் ஜிம் நிலைய நிர்வாகத்தை பாராட்டும் வகையிலும்; அதன் வளர்ச்சிக்காகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் றிசாட் பதியுதீன் பாராளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 200,000 ரூபாய் ஒதிக்கீடு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று அமீர் அலி  குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .