Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Mithuna / 2024 பெப்ரவரி 22 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ. சக்தி
மட்டக்களப்பிலுள்ள பாடசாலை மாணவர்களிடையே கூடைப்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்துவதை நோக்காக கொண்ட பயிற்சிப் பாசறை இரண்டு நாட்களாக நடைபெற்றுள்ளது.
மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான இந்த கூடைப்பந்தாட்ட பயிற்சிநெறியானது தன்னாமுனை மியானி உள்ளக கூடைப்பந்தாட்ட அரங்கில் மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் எந்திரி பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு கூடைப்பந்தாட்ட சம்மேளனம், தேசிய கூடைப்பந்தாட்ட சம்ளேனம் ஆகியன இணைத்து மாவட்டத்தில் கூடைப்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிப்பதற்கும் மாகாண மட்ட மற்றும் தேசிய மட்டத்துக்கு வீரர்களைத் தயார்படுத்தும் நோக்கில் இப்பயிற்சிப் பாசறையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது கூடைப்பந்தாட்ட விளையாட்டு நுணுக்கங்கள் மற்றும் அனுபவங்கள் பயிற்றுவிப்பாளர்களால் பகிரப்பட்டன. இந்நிகழ்வில் பாடசாலை விளையாட்டுத்துறை ஆசிரியர்கள், கிழக்கு பல்கலைக்கழக விளையாட்டு வீரர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சிப்பாசறையில் கலந்து கொண்ட பாடசாலை மாணவர்களுக்கு, இதன் நிறைவில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
34 minute ago
46 minute ago