Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜனவரி 20 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஏ.எல்.எம். ஷினாஸ்
மருதமுனை கிரிக்கெட் சங்கத்தின் 2025/2026 ஆண்டிற்கான புதிய நிர்வாகத் தெரிவானது
மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் முன்னாள் தலைவர், சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் யூ.எஸ். சமீம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதன்போது நிறைவேற்று சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதில் கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக மருதம் விளையாட்டு கழகத்தின் பொதுச் செயலாளரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஏ. மனாஸ் தெரிவானார்.
கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக எம்.ஐ. நஜிமுல் றியாஸ் தெரிவானார். பொருளாளராக
எம்.எம். சறூக் தெரிவு செய்யப்பட்டார். இவர்களுடன் சிரேஷ்ட உதவித் தலைவராக
ஏ.எம்.எம்.றியாஜத் தெரிவு செய்யப்பட்டதுடன், ஏ.ஆர்.எம். உவைஸ், எம்.ஆர். மபாஸ் ஆகியோர்
உதவித் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள். உதவிச் செயலாளராக எம்.பி.எம். றாஜித்
தெரிவானார்.
இதனை அடுத்து கடந்த 5ம் திகதி நடாத்தப்பட்ட மருதமுனை கிரிக்கெட் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவின் முதலாவது கூட்டத்தில் பின்வரும் குழுக்களுக்கான பிரதிநிதிகளும் நியமனம் செய்யப்பட்டனர்.
சுற்றுப் போட்டிக் குழு
1. தவிசாளர்:- ஏ.எம்.எம். றியாஜத்
2. தலைவர் (கி.ச): ஏ. மனாஸ்
3. பொதுச் செயலாளர் (கி.ச) : எம்.ஐ. நஜிமுல் றியாஸ்
உறுப்பினர்கள்
4. ஏ.எம்.எம். றஜி (யுனிவர்ஸ் வி.க)
5. சி.எம். அஸ்ஹர் (றோயல் வி.க)
ஒழுக்காற்று குழு
1. தவிசாளர் :- ஏ.ஆர்.எம்.உவைஸ்
2. தலைவர் (கி.ச):- ஏ. மனாஸ்
3.பொதுச் செயலாளர் (கி.ச):- எம்.ஐ. நஜிமுல் றியாஸ்
உறுப்பினர்கள்
4. ஜெ. நிஜாமுடீன் (கிறிஸ்டல் வி.க)
5. ஏ.ஆர். ஹிஸ்புள்ளாஹ் (றோயல் வி.க)
மேன்முறையீட்டுக் குழு
1. தவிசாளர்:- எம்.ஆர். மபாஸ்
2. தலைவர் (கி.ச):- ஏ. மனாஸ்
3. பொதுச் செயலாளர் (கி.ச):- எம்.ஐ. நஜிமுல் றியாஸ்
உறுப்பினர்கள்:-
4. என்.தில்ஸாத் - (TW வி.க)
5. எம்.ஜெ. சமீறுல் ஹக் (எலைட் வி.க)
தொழில்நுட்பக்குழு
1. தவிசாளர்:- ஏ.எல்.எம். ஷினாஸ்
2. தலைவர் (கி.ச) :- ஏ. மனாஸ்
3. பொதுச் செயலாளர் (கி.ச) :- எம்.ஐ.நஜிமுல் றியாஸ்
உறுப்பினர்கள்:-
4. Dr.எம்.ஐ. முஜாஹித் (கிறிஸ்டல் வி.க)
5. ஏ.கே. ஸானிஜ் கலீஸ் (TW வி.க)
மத்தியஸ்தர் குழு
1. தவிசாளர் :- எம்.என்.எம். நாஜித்
2. தலைவர் (கி.ச) :- ஏ.மனாஸ்
3. எம்.ஐ. நஜிமுல் றியாஸ் - பொதுச் செயலாளர் (கி.ச)
உறுப்பினர்கள்:-
4. எம்.பி.எம். றாஜித் (பென்ஸின் வி.க)
5. ஏ.எம்.எம். றியாஜத் (மிமா வி.க)
எண்ணாய்வாளர்
1. எம்.ஆர். பஸால் அமூன் (மருதம் வி.க)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago