Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2023 மார்ச் 22 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். றொசேரியன் லெம்பேட்
மடு மாந்தை கால்பந்தாட்ட சம்மேளனத்துக்குட்பட்ட அனைத்து கழகங்களையும் உள்ளடக்கி அனைத்துக் கழகங்களுக்கும் உரிய வாக்குரிமை வழங்கி இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன பிரதிநிதி முன்னிலையில் சரியான ஒரு நிர்வாகத் தெரிவை நடத்த வேண்டும் என மடு மாந்தை கால்பந்தாட்ட லீக்கின் புதிய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மடு மாந்தை கால்பந்தாட்ட லீக்கின் புதிய தலைவர் எம்.டி. அருண்ராஜ், செயலாளர் யே. ஒகஸ்ரின், பொருளாளர் க. மகேந்திரன் ஆகியோர் இணைந்து மன்னாரில் அண்மையில் ஊடக சந்திப்பை மேற்கொண்டனர். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “உண்மையில் விளையாட்டு அமைப்புகள் விளையாட்டு வீரர்களின் திறனை வளர்த்துக் கொள்வதற்கான களத்தை அமைத்துக் கொடுப்பது, அவர்களின் திறமைகளை வெளி உலகுக்கு கொண்டு வருவதற்கான செயற்பாட்டை மேற்கொள்வதற்கான குழுவாகவே காணப்பட வேண்டும்.
ஆனால் தன்னிச்சையான செயல்பாடுகள், தான் சார்ந்த செயற்பாடுகளை மேற்கொண்டு விளையாட்டு வீரர்களின் மனநிலையைப் பாதிப்படையச் செய்கின்ற செயல்பாடாக தற்போது மடு மாந்தை லீக்கில் இடம்பெற்று வருவதாக எண்ணத் தோன்றுகின்றது.
மடு மாந்தை லீக்கின் முந்தைய தலைவர் தன்னிச்சையாக தான் சார்ந்த ஒரு சில குறிப்பாக அவரின் ஊரில் உள்ள இரண்டு கழகமும், அருகில் உள்ள கத்தாளம் பட்டி கிராமத்தில் இருந்து ஒரு கழகம் உள்ளடங்களாக 3 கழகங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு ஏனைய 14 கழகங்களில் உள்ள விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கிக் கொண்டு இருக்கின்றனர்” என்று கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago