Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 25 , பி.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்
பொன் அணிகளின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிகளுக்குமிடையிலான 106ஆவது போட்டியில் இனிங்ஸால் புனித பத்திரிசியார் வென்றது.
நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணக் கல்லூரி முதலில் களத்தடுப்பிலீடுபடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி 9 விக்கெட்டுகளை இழந்து 272 ஓட்டங்களை பெற்ற நிலையில் தமது இனிங்ஸை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், அபிலாஸ் 54, சமிதன் 50 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பிருந்தன், நர்தனன், றோய் ஜெனிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில், மதுசன் 24 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், சாருசன், சதுர்ஜன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில், பலோ ஒன் முறையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட யாழ்ப்பாணக் கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 179 ஓட்டங்களைப் பெற்று இனிங்ஸ் மற்றும் 23 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், மதுசன் 54, நர்தனன் 22 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சாருசன், அபிலாஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக யாழ்ப்பாணக் கல்லூரியின் மதுசனும், சிறந்த பந்துவீச்சாளராக புனித பத்திரிசியார் கல்லூரியின் சாருசனும், போட்டியின் நாயனாக அதே கல்லூரியின் அபிஸாஸும் தெரிவாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago