Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Mithuna / 2023 டிசெம்பர் 18 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். நூர்தீன்
கிழக்கு மாகாண மட்ட பூப்பந்தாட்டத் தொடரானது மாகாண பூப்பந்தாட்ட சங்கம் அல்ரா நிறுவனத்துடன் இணைந்து காத்தான்குடி அல்ரா பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் எதிர்வரும் ஞாயிறு(24), திங்கட் (25) கிழமைகளில் நடாத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக பிரதேச ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று, அல்ரா குழுமம் நிறுவனத்தின் அலுவலகத்தில் சனிக்கிழமை (16) நடைபெற்றது.
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் செயலாளர் அலியார் பைசர், “மட்டக்களப்பு மாவட்டத்திலும் காத்தான்குடியிலும் பூப்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், மாகாண மட்ட, தேசிய மட்ட, சர்வதேச மட்ட பூப்பந்தாட்டப் போட்டிகளுக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து சிறந்த பூப்பந்தாட்ட வீரர்களை உருவாக்கும் நோக்கத்தோடும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இதன் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் வகையிலும் இந்த பூப்பந்தாட்டத் தொடரை முதற் தடவையாக மட்டக்களப்பு காத்தான்குடியில் நடாத்துகிறோம்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமாகி திங்கட்கிழமை மாலையுடன் நிறைவு பெறவுள்ளது. இதில் கிழக்கு மாகாணத்திலுள்ள 62 பூப்பந்தாட்ட விளையாட்டுக் கழகங்களிலிருந்து 200க்கு மேற்பட்ட போட்டியாளர் பங்குபற்றவுள்ளனர்.இதன்மூலம் சமூக ஒற்றுமையும் இனங்களுக்கிடையிலான பரஸ்பரம் புரிந்துணர்வும், நல்லிணக்கமும் ஏற்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உண்டு. இதில், தமிழ். சிங்கள, முஸ்லிம் வீரர்கள் அதே போன்று வீராங்கனைகளும் பங்குபெறவுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
27 Apr 2025
27 Apr 2025
27 Apr 2025