Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஏப்ரல் 24 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோப்பூர் - பட்டியடி திறந்தவெளி மைதானத்தில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் செவ்வாய்கிழமை (23) மாலை இடம்பெற்றன. இதனை தோப்பூர் பாரம்பரிய விளையாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்வின் போது சமாதானப் புறாக்கள் பறக்க விடப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. மாட்டு வண்டில் சவாரிப் போட்டி, படகோட்டப் போட்டி உள்ளிட்ட போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில், அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் ,திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரான ஏ.எல்.எம்.அதாவுல்லா,மாவட்ட அரசாங்க அதிபர் ,பொலிஸ் உயரதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள்,அரச உயரதிகாரிகள், கல்விமான்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
தீஷான் அஹமட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
6 hours ago
21 Apr 2025
21 Apr 2025