Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 நவம்பர் 26 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்
அகில இலங்கை சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட தேசிய மட்டத்திலான கராத்தேயில் புத்தளம் மாணவர் பிரகாசித்துள்ளனர்.
கொழும்பு சுகதாஸ உள்ளக விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற இப்போட்டியில் வொஷி சோட்டோகான் கராத்தே டூ சங்கத்தின் மாணவர்களே பிரகாசித்துள்ளனர்.
புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியில் 08 ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி எம்.ஆர்.எம். அம்னா, 13 வயதுக்குட்பட்ட பிரிவில் தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார்.
நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகாவித்தியாலய மாணவன் எம்.ஆர். ரிப்கி அஹமட் 09 வயதுக்குட்பட்ட பிரிவில் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார்.
மதுரங்குளி எக்ஸலன்ஸ் பாடசாலை மாணவி ஆர். ஷெபா, 14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட பிரிவில் மூன்றாமிடங்களைப் பெற்றுள்ளார்.
இம்மாணவருக்கான பயிற்சிகளை டபிள்யூ. எஸ்.கே.ஏ கராத்தே சங்கத்தின் பிரதான போதனாசிரியரும், பயிற்றுவிப்பாளருமாகிய சிஹான் எம். பைரோஸ் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
6 minute ago
1 hours ago