2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

தேசியத்துக்கு தெரிவாகிய கிசார்த்தனாவுக்கு கௌரவம்

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 08 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.ஏ. றமீஸ்

பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுநர் விளையாட்டு போட்டியில் திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலய மாணவி எஸ். கிசார்த்தனா ஈட்டி எறிதலில் இரண்டாமிடத்தினைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கும் தெரிவாகிள்ளார்.

கிசார்த்தனாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் த.இந்திரன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது கிசார்த்தனா மற்றும் மாணவியின் பெற்றோர், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் இ. ஹேமலக்சன், உடற்கல்வி ஆசிரியர்கள் மு. சிவசாந்தன், லட்சுமி திருச்செல்வம் ஆகியோர் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன், நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X