2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

தேசியத்தில் மல்யுதத்தில் மகிழடித்தீவு பவிசனன் சாதனை

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.ரி. சகாதேவராஜா

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மல்யுத்தப் போட்டியில் 16 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலய மாணவன் ம. பவிசனன் மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார். 

தனது கன்னி முயற்சியில் தேசிய ரீதியில் இம் மாணவன் சாதித்திருப்பது எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளை இம் மாணவன் படைப்பான் என்பதையே பறைசாற்றுகிறது என வித்தியாலய சிரேஷ்ட ஆசிரியை திருமதி நளினி அகிலேஸ்வரன் தெரிவித்தார்.

இம்மாணவனை தேசியத்தில் சாதிக்க வழிசமைத்த பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நி. நிசோத் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கை. தெய்வேந்திரகுமார்  ஆகியோருக்கும் பாடசாலையின் விளையாட்டுத்துறைசார் வளர்ச்சியில் பக்கபலமாக இருக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் உள்ளிட்ட வலய கல்வி அதிகாரிகள் உடற்கல்வி பாடத்துறைக்கான உதவிக்கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரிய ஆலோசகர் ஆகியோர்களுக்கும் பாடசாலையின் கல்விச் சமூகத்தினர் நன்றியினை தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .