Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Janu / 2024 டிசெம்பர் 12 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பளை சாஹிரா கல்லூரி பாடசாலை மாணவர்கள் சவாட் கிக் பாக்ஸிங் நொவிசஸ் மற்றும் சூப்பர் பைட்டர் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
கம்பளை சாஹிரா கல்லூரி அதிபர் ஜ.ஏ.எம் அப்ஷான் மற்றும் உதவி அதிபர் டி.எம்.பர்ஹான் மூவி மேலும் சாஹிரா கல்லூரி கிக் பாக்ஸிங் பயிற்றுவிப்பாளர் டி.எம்,நவ்ஷாட் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
இதில் மூன்றாவது முறையும் முதல் இடத்தை பிடித்த சாஹிரா கல்லூரி பாடசாலை மாணவர்கள்
மூன்றாவது அகில இலங்கை சூப்பர் ஃபைட்டர் போட்டியில் பல்வேறு மாகாணங்களில் இருந்து பங்கு பற்றிய மாணவர்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட மாபெரும் சூப்பர் பைட்டர் போட்டியில் கம்பளை சாஹிரா கல்லூரி முதலாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளது.
தங்கப்பதக்கம் 25 வெள்ளி பதக்கம் 20 வெண்கலப்பதக்கம் 8 பெற்று கம்பளை சாஹிரா கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கம்பளை சாஹிரா கல்லூரி பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
நவி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .