2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சம்பியனான லிவர்பூல்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 07 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

புத்தளம் கால்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கால்பந்தாட்டத் தொடரில் லிவர்பூல் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

அணிக்கு ஒன்பது பேரைக் கொண்ட புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் த்றீ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை வென்றே லிவர்பூல் சம்பியனானது.

இப்போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாமல் போட்டி சமநிலையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற பெனால்டியில் 5-4 என்ற ரீதியில் வென்றே லிவர்பூல் சம்பியனானது.

போட்டியின் முடிவில் உரையாற்றிய புத்தளம் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ்.எம். ரபீக், விரைவில் அடுத்த கட்டமாக 21 வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்தாட்டத் தொடரை நடாத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .