Mayu / 2024 மார்ச் 05 , பி.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம். சனூன்
புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் ஸ்தாபகர் முஹம்மது யமீனின் ஏற்பாட்டில் நடைபெற்ற
லெஜன்ட்ஸ் சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் கொழும்பு கெடேரியன் கழகம்
சம்பியனானது.
அணிக்கு ஒன்பது பேரைக் கொண்ட 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்
போட்டியில் கலகெதர எவர்கிறீன் கழகத்தை வென்ரே கெடேரியன் சம்பியனானது.
இறுதிப் போட்டியில் எதுவிதக் கோல்களும் பெறப்படாமல் சமநிலையில் முடிவடைந்ததையடுத்து பெனால்டியில் கெடேரியன் சம்பியனானது.

இத்தொடரின் சிறந்த கோல்காப்பாளராக எவர்கிறீனின் இந்திகவும், சிறந்த வீரராக
கெடேரியனின் நியாஸும் தெரிவாகினர்.

சம்பியனான கெடேரியனுக்கு 50,000 ரூபாய் பணப் பரிசும் வெற்றிக் கிண்ணமும்,
இரண்டாமிடத்தைப் பெற்ற கெடேரியனுக்கு 25,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டன.
புத்தளம் லிவர்பூல் கழகம், புத்தளம் நியூ ஸ்டார்ஸ் கழகம், திருகோணமலை ட்ரிங்கோ எப்.சி,
குருநாகல் கார்டியன் எப்.சி, கண்டி லைட் இன்பென்ட்ரி கழகம், பரஹதெனிய லெவிண் ஸ்டார்
கழகம் ஆகியனவே இத்தொடரில் பங்கேற்ற ஏனைய கழகங்களாகும்.

2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025