2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சம்பியனான கற்பிட்டி பிரதேச செயலகம்

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 03 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்த புத்தளம் மாவட்ட பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான சுதந்திர தின வெற்றி கிண்ண மென்பந்தாட்டத் தொடரானது வென்னப்புவ அல்பட் பீரிஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இத்தொடரில் புத்தளம் மாவட்ட செயலகத்துக்குட்பட்ட 16 பிரதேச செயலக அணிகளும், புத்தளம் மாவட்ட செயலக அணி மற்றும் புத்தளம் நகர சபை அணி அடங்கலாக 18 அணிகள் பங்கேற்றிருந்தன. 

18 அணிகளும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விலகல் முறையில் இடம்பெற்ற தொடரில், தான் சந்தித்த முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்ற கற்பிட்டி பிரதேச செயலக அணியும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலக அணியும் முதல் அரையிறுதியில் மோதியது. 

இதில் இலகு வெற்றி பெற்ற கற்பிட்டி பிரதேச செயலக அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தெரிவானது. 

பின்னர் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் புத்தளம் பிரதேச செயலக அணியை வீழ்த்திய வண்ணாத்திவில்லு பிரதேச செயலக அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. 

இறுதிப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற வண்ணாத்திவில்லு பிரதேச செயலக அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. 

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய கற்பிட்டி பிரதேச செயலக அணி நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

பின்னர் 44 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய வண்ணாத்திவில்லு பிரதேச செயலக அணி கற்பிட்டி பிரதேச செயலக அணியின் மிகத்துல்லியமான பந்துவீச்சில் தடுமாற்றம் கண்டு 4.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 35 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொள்ள விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் கற்பிட்டி பிரதேச செயலக அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் மகுடத்தை தனதாக்கிக் கொண்டது.

இத்தொடரின் பரிசளிப்பு விழாவில் அதிதிகளாக புத்தளம் மாவட்ட செயலாளர், உதவி செயலாளர் மற்றும் பிரதேச செயலகங்களின் செயலாளர்கள் என அனைவரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பியனான கற்பிட்டி பிரதேச செயலகம்

எம்.யூ.எம். சனூன்

புத்தளம் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்த புத்தளம் மாவட்ட பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான சுதந்திர தின வெற்றி கிண்ண மென்பந்தாட்டத் தொடரானது வென்னப்புவ அல்பட் பீரிஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இத்தொடரில் புத்தளம் மாவட்ட செயலகத்துக்குட்பட்ட 16 பிரதேச செயலக அணிகளும், புத்தளம் மாவட்ட செயலக அணி மற்றும் புத்தளம் நகர சபை அணி அடங்கலாக 18 அணிகள் பங்கேற்றிருந்தன

18 அணிகளும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விலகல் முறையில் இடம்பெற்ற தொடரில், தான் சந்தித்த முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்ற கற்பிட்டி பிரதேச செயலக அணியும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலக அணியும் முதல் அரையிறுதியில் மோதியது

இதில் இலகு வெற்றி பெற்ற கற்பிட்டி பிரதேச செயலக அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தெரிவானது

பின்னர் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் புத்தளம் பிரதேச செயலக அணியை வீழ்த்திய வண்ணாத்திவில்லு பிரதேச செயலக அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவானது

இறுதிப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற வண்ணாத்திவில்லு பிரதேச செயலக அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய கற்பிட்டி பிரதேச செயலக அணி நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது

பின்னர் 44 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய வண்ணாத்திவில்லு பிரதேச செயலக அணி கற்பிட்டி பிரதேச செயலக அணியின் மிகத்துல்லியமான பந்துவீச்சில் தடுமாற்றம் கண்டு 4.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 35 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொள்ள விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் கற்பிட்டி பிரதேச செயலக அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் மகுடத்தை தனதாக்கிக் கொண்டது.

இத்தொடரின் பரிசளிப்பு விழாவில் அதிதிகளாக புத்தளம் மாவட்ட செயலாளர், உதவி செயலாளர் மற்றும் பிரதேச செயலகங்களின் செயலாளர்கள் என அனைவரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X