2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சம்பியனானது பொலி லயன்ஸ்

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 24 , பி.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.என்.எம். அப்ராஸ்

சாய்ந்தமருது மியண்டாட் விளையாட்டுக் கழகத்தின் எப்.எஸ்.கே. மியன்டாட் பிறீமியர் லீக் கடினபந்து கிரிக்கெட் தொடரில் பொலி லயன்ஸ் சம்பியனானது.

சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மாளிகா யுனைட்டெட்டை வென்றே லயன்ஸ் சம்பியனானது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற லயன்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடி எட்டு ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 75 ஓட்டங்களை லயன்ஸ் பெற்றது.

பதிலுக்கு 76 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய யுனைட்டெட் எட்டு ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 65 ஓட்டங்களையே பெற்று 10 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இறுதிப் போட்டியின் நாயகனாக லயன்ஸின் என்.எல்.எம். சாஹிர், தொடரின் நாயகனாக மற்றும் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவராக மருதூர் வொரியர்ஸின் எஸ்.எல். மனாஸ், தொடரின் அதி கூடிய விக்கெட்டுக்களை கைப்பற்றியவராக யுனைட்டெட்டின் ஏ.பி.எம். பைஸால் ஆகியோர் தெரிவாகினர்.

தவிர தொடரின் அதி கூடிய ஆறு ஓட்டங்களை பெற்றவராக சாந்தம் சலஞ்சர்ஸின் ஏ.எச்.எம். முர்ஸித், தொடரின் அதி கூடிய நான்கு ஓட்டங்களைப் அதேயணியின் யு.எல்.எம். ஆஷிக், தொடரின் வளர்ந்து வரும் அதேயணியின் என்.எம். ஹைஸ் ஆகியோரும் தெரிவாகினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .