Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
குணசேகரன் சுரேன் / 2019 ஜூலை 22 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கல்வி அபிவிருத்தி நிதியம், விளையாட்டு நிதியம், பழைய மாணவர் சங்கம் ஆகியன இணைந்து முன்னாள் கால்பந்தாட்ட பயிற்றுநர் அமரர் ரி. பத்மநாதன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்துக்காக யாழ்ப்பாண மாவட்ட தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளின் 19 வயதுக்குட்பட்ட கால்ப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடாத்திய கால்பந்தாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி சம்பியனானது.
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் கடந்த வாரயிறுதியில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றே சென். பற்றிக்ஸ் கல்லூரி சம்பியனாகியிருந்தது.
அந்தவகையில், முதலாவது அரையிறுதிப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியை சென். பற்றிக்ஸ் கல்லூரியும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை நெல்லியடி மத்திய கல்லூரியும் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தன.
இத்தொடரின் மூன்றாமிடத்துக்கான போட்டியில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியை வென்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
6 hours ago