Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 14 , பி.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வ. சக்தி
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லடி வேலூர் பொது விளையாட்டு மைதான அபிவிருத்திக்கான அடிக்கல் அண்மையில் நாட்டி வைக்கப்பட்டது.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின்பால் நாட்டை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் தொகுதி ரீதியாக ஒரு விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா, பட்டிருப்பு, மட்டக்களப்பு ஆகிய தொகுதிகளிற்காக மூன்று பாரியளவிலான அனைத்து வசதிகளுடனான விளையாட்டு மைதானங்களை அமைப்பதற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான விளையாட்டு மைதானமான மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் முன்மொழிவுக்குஅமைவாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கல்லடி வேலூர் பொது விளையாட்டு மைதானத்துக்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்தவைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்திநராக முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பூ. பிரசாந்தன் கலந்துகொண்டதுடன் 5 மில்லியன் ரூபாய் முதற்கட்ட நிதியின் ஊடாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள விளையாட்டு மைதானத்துக்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வுக்கு ஆன்மீக அதிதியாக கல்லடி வேலூர் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வாசுதேவன் குருக்களும், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபைத் தலைவர் தி. சரவணபவன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் எஸ். யோகவேள் மற்றும் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் உ. சிவராசா, மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ. சுதர்சன், மாநகர சபையின் உறுப்பினர்களான சி. சுபராஜ், மதன், ஜெயா, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மண்முனை வடக்கிற்கான தலைவர் கே. காந்தராஜா ஆகியோர் உள்ளிட்ட கிராம உத்தியோகத்தர்கள், மாநகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்ததுடன் மாவட்டத்தில் பாரியதொரு விளையாட்டு மைதானமாக சகல வசதிகளுடனும் அமையப்பெறவுள்ள குறித்த விளையாட்டு மைதானத்திற்கான அடிக்கல்லையும் நாட்டிவைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago