Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை
Janu / 2024 ஓகஸ்ட் 18 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்வின் வழிகாட்டலின் கீழ் ஈகிள் கோல்ப் கதலினா பதக்க கோல்ப் போட்டிகள் கொக்கல விமானப்படை கோல்ப் மைதானத்தில் சனிக்கிழமை (17) அன்று நிறைவுக்கு வந்தது.
இந்த நிகழ்வானது கோல்ப் போட்டிகளில் இன்னுமொரு பரபரப்பான அத்தியாயமாக கோல்ப் போட்டியாளர்களுக்கு புதியதொரு அனுபவத்தை பெறக்கூடிய ஒரு விளையாட்டாக இருந்தது இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கலந்து கொண்டார்.
இந்த போட்டித் தொடரில் 40 போட்டியாளர்கள் உயர்மட்ட விருதுகளுக்காக போட்டியிட்டனர் . சிறந்த செயல் திறனுக்கான விருதுகளை ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் முறையே எயார் வைஸ் மார்ஷல் சுரேஷ் பெர்னாண்டோ மற்றும் பிரவீனா துனுவில ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மொத்த புள்ளிகளின் அடிப்படையில் தொடரின் இரண்டாமிடத்தை பெண்கள் பிரிவில் மனோரி ஜெயக்கொடியும், ஆண்கள் பிரிவில் எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜேசிங்கவும் (ஓய்வு) பெற்றனர். மேலும் பெறப்பட்ட நிகர மதிப்பெண் அடிப்படையில் பிரவீனா துனுவில மற்றும் எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜேசிங்க (ஓய்வு) ஆகியோர் முறையே பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவுக்கான மொத்த புள்ளிகள் பிரிவில் பிரவீனா துனுவில மற்றும் விங் கமாண்டர் பிரபாத் விஜேகோன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஆகஸ்ட் மாதத்திற்கான கௌரவமான ஈகிள்ஸ் கேடலினா மாதாந்த பதக்கம், மகளிர் பிரிவில் வெற்றியாளராக நிகர மதிப்பெண்ணைப் பெற்ற மனோரி ஜெயக்கொடிக்கு வழங்கப்பட்டது, ஆடவர் பிரிவில் எயார் கொமடோர் எரந்திக குணவர்தன ஆகஸ்ட் மாதத்திற்கான வெற்றியாளர் நிகர மதிப்பெண் மற்றும் ஈகிள்ஸ் கேடலினா மாதாந்திர பதக்கத்தை பெற்றார்.
இந்த நிகழ்வில் விமானப்படை பதவிநிலை பிரதானி மற்றும் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் விமானப்படை கோல்ப் பிரிவின் தலைவர் மற்றும் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago