2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

ஒலுவில் அல்-ஹம்றாவுக்கு இரண்டு முதலிடங்கள்

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 10 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- றியாஸ் ஆதம்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் ஒலுவில் அல் - ஹம்றா மகா வித்தியாலய மாணவிகளான ஆர்.எப். சமா, எச்.எப். லுபினா ஆகியோர் முதலாமிடங்களைப் பெற்று தங்களது பாடசாலைக்கும் பிரதேசத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (07) நடைபெற்ற இப்போட்டிகளில், 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதலில் சமா 25.78 மீற்றர் தூரம் வீசி முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு போடுதலில் லுபினா 9.54 மீற்றர் தூரம் எறிந்து முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

குறித்த இரு மாணவிகளும் தேசிய மட்ட விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X