2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஏறாவூரில் கிரிக்கெட் சீருடை அறிமுக விழா

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 14 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

- றம்ஸீன் முஹம்மட்

ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் உத்தியோகபூர்வமான சீருடை அறிமுக விழா அண்மையில் டாக்டர் அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தில் லக்கி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் நிர்வாக தலைவர் ஏ.ஸி.ஏ. சலாம் தலைமையில் இடம்பெற்றது.

லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்கான உத்தியோகபூர்வ சீருடைக்கு ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம். றியாழ் தனது சொந்த நிதியில் அனுசரணை வழங்கினார்.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான செய்யத் அலிஸாஹிர் மௌலானாவும்,
கௌரவ அதிதிகளாக ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ். நழீம், நகர சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம். றியாழும், சிறப்பு அதிதிகளாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஆர். ஹர்ஷடி சில்வா, சியப்பத்தா எல்.எல்.ஸி  நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எம்.எச்.எம். பிரிம்ஷாத் ஆகியோரும், அதிதிகளாக ஏறாவூர் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.எம். ஆஷிக், செயலாளர் ஏ.எம். அஸ்மி, பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அத்தோடு கலந்து கொண்ட பிரதம அதிதி, கௌரவ அதிதிகளுக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .