Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 14 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
இலங்கை கிரிக்கெட் சபையானது ஊழல் நிறைந்ததாகவும், அரசியல் தலையீடும் மிக்கதாக காணப்படுவது கவலை அளிப்பதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மஹ்ரூப்,
“இலங்கை கிரிக்கெட் சபைக்கு சர்வதேச கிரிக்கெட் சபையால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணம் ஊழலும், அரசியலுமேயாகும்.கிரிக்கெட் சபைக்குள் ஊழல் நிறைந்தால் எவ்வாறு கிரிக்கெட்டை முன்னகர்த்திச் செல்ல முடியும்.
இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஆளும் கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதமும் வாக்களிப்பு நடைபெறவிருந்த சந்தர்ப்பத்தில் சபாநாயகர் சபையிலிருந்து இடையில் சென்றமையானது கிரிக்கெட்டிலும் அரசியல் இருக்கின்றதா என்கின்ற சந்தேகத்தை பலமாக ஏற்படுத்துகின்றது.
இலங்கை கிரிக்கெட் சபைக்கு தடைவிதிக்கப்பட்டமையானது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபைல் உள்ள ஊழல், அரசியல் தலையீடுகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
3 hours ago
5 hours ago